இக்கடிதம் ஆகஸ்டு 10, 2015 அன்று எழுதியது. ஐ.ஐ.டி பேராசிரியருக்கு அவருடைய ஒரு கானொளி உரையை கேட்டுவிட்டு எழுதிய கடிதம்..
மதிப்பிற்குறிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
என் பெயர் அருள் செல்வம். உணவு பதன்செய் பொறியியல் துறையில் முனைவர் பட்ட மாணவராக கோயமுத்தூர், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் படித்து கொண்டிருக்கிறேன். தங்களுடைய வலைப்பக்கத்தை 2008-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன் நீங்கள், பத்ரி, அருள்செல்வன் கந்தசாமி சேர்ந்து நிர்வகித்த அறிவியல்.இன்போ வலைதளத்திலிருந்து தான் எனக்கு பரிட்சயம் ஆனிர்கள். இதற்கு முன்பும் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் நினைவிருக்கலாம். அண்மையில் உங்களுடைய காணொளி உரையை பார்த்தேன்; கேட்டேன். சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.
முத்தமிழ் விழாவில் நீங்கள் பேசிய கருத்துகள் இவை // சிறுவயது முதலே ஆங்கிலவழி கல்வி முறையில் படித்ததினால் தமிழில் எழுத வேண்டுமென்ற என்னம் தற்செயலாக வந்தது என்று//
எனது வாழ்க்கை அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதனால் உங்களுடைய இந்த முயற்சி (தமிழில் அறிவியல் எழுதுவது) எவ்வளவு முக்கியமானது என்று தோன்றலாம்.
நான் ஒரு ஏழைக்குடும்பத்து மாணவன் எனது அப்பா தஞ்சாவூர் மார்க்கெட்டில் மூட்டை தூக்கி சம்பாதிக்கும் கூலி தொழிலாளி ஆகவே எனது பள்ளி நாட்கள் அரசாங்க பள்ளிகளில் கழிந்தது. பனிரெண்டாம் வகுப்பில் தொழிற்கல்வி பாடமாக இருந்த வேளாண்மையை எடுத்து படித்தேன் அதற்கு காரணம் என் பொற்றோருக்கு எந்த குரூப் எடுத்து படிக்க வைத்தால் வாழ்கை நல்ல முறையில் அமைக்க முடியும் என்று தெரியாதவர்கள் என்பதால் ஏதோ படிக்க வைக்க வேண்டும் என்று தான் அப்பொழுது அவர்களுக்கு முக்கியமாக தோன்றியது. என்பொற்றோரை குறை சொல்ல விருப்பவில்லை அத்தனை கஷ்டத்திலும் என்னை படிக்க வைத்தனர். நான் வகுப்பில் சுமாரான மாணவன் புரிந்து படிக்க தெரியாது மணப்பாடம் பண்ணிதான் பரிட்சைகள் எழுதுவேன். +2 வில் நான் எடுத்த மதிப்பென்கள்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை வேளாண் பொறியியல் படிக்க இடம் கிடைத்தது 2002-ல். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது soil என்றால் மண் என்பது எனக்கு தெரியாது chili என்றால் மிளகாய் என்பது தெரியாது இந்த அளவுதான் என் அறிவு இருந்தது. கல்லூரியில் ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் தான் பாடம் நடத்துவார்கள் ஆகையால் ஆரம்ப நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தன நான்காண்டுகள் பட்டபடிப்பில் நான் அரியர்கள் வைத்து பாஸ் ஆகி இளநிலை படிப்பை முடித்தேன்.
இளநிலை முடித்தவுடன் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் பயோ டீசல் எடுக்கும் ஆராய்சியில் 2006-ல் பணியில் சேர்ந்தேன் அப்பொழுது நல்ல பேராசிரியர்களிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது அறியாமையை புரியவைத்தனர். ஆராய்சியின் மீது எனக்கு ஆசை வந்ததும் அப்பொழுதுதான். அன்று சம்பளம் எனக்கு மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் ஒரு வருடத்திற்கு மேல் என்னால் தொடர்ந்து அங்கு வேலை செய்ய முடியவில்லை.
2007ன் இறுதியில் ஒரு தனியார் சொட்டு நீர் பாசன கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு விவசாயிகளை பார்த்து எனது நிறுவன சொட்டுநீர் பாசன அமைப்பை விவசாய நிலங்களுக்கு அமைத்து தர வேண்டும் அதுதான் என் வேலை. தெரிந்தே நிறைய பொய்கள் சொல்ல வேண்டியிருந்தது இயற்கையில் நான் ஒரு ஏழை என்பதால் என்னைப் போன்ற ஏழை விவசாயிகளை பிழைப்பிற்காக ஏமாற்ற மனம் இடம் கொடுக்கவில்லை மேலும் ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட பேராசிரியர்களின் நட்பு என்னை அறிவியலை நோக்கி வர வைத்தது 2008 அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோவையில் வேளாண் பல்கலையில் இளநிலை ஆராய்சியாளராக சேர்ந்தேன் அதற்கு முக்கிய காரணம் கேட் எக்சாம் எழுதி கரக்பூரில் இருக்கும் ஐஐடியில் எம்டெக் படிக்க வேண்டும் என்பதே.
நான் 2006லிருந்தே இந்த எக்சாமை தொடர்ந்து எழுதி வந்தேன் ஆனால் வெற்றி பெற முடியவில்லை காரணம் பாடங்களை ஆழமாக புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிரமம் மேலும் அடிப்படை அறிவியல் தகவல்கள் சுத்தமாக எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.
இதற்கிடையில் தொடர்ந்து பரிட்சைகளில் பெயிலாகி வந்ததினால்
சுற்றியிருப்பவர்கள் நீ படிப்பதற்கே லாயக்கில்லை என ஏளனமாக பேச
ஆரம்பித்தனர் மிகவும் நொந்து போன நிலையில் தான் உங்களுடை அறிவியல் இன்போ தளம் கண்ணில் பட்டது அப்பொழுது எனக்கிருந்த ஒரே ஆறுதல் இதுமாதிரியான வலைதளங்கள் தான் கீற்று, தின்னை போன்ற வலைதளங்களில் இருந்த அறிவியல் கட்டுரைகளை தமிழில் படிக்க ஆரம்பித்தேன் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டேன். மிர் பதிப்பக புத்தகங்கள் தமிழில் இருப்பது தெரிந்து படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது.
2011-ல் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் பசாகி பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலுள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தில் எம்டெக் உணவு பதப்படுத்தும் துறையில் கல்வி உதவித் தொகையுடன் படிக்க இடம் கிடைத்தது. 2013-ல் படிப்பை முடித்தேன். எம்டெக் முடிக்கும் போது 5 ஆராய்சி கட்டுரைகள் எழுதி சமர்பித்திருந்தேன் 2 வெகுஜன அறிவியல் கட்டுரைகள் கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் பிரசுரமாகியிருந்தது.
கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்கள் வாங்க பழகினேன் அதுவே ஒரு நல்ல பழக்கமாகி இன்று நிறைய புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. அறிவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது.
ஐயா உங்கள் உரையில் உங்கள் மாணவர்களை நன்கு கவனித்து நெருக்கமாக பழகி இனம் கண்டு கொள்கிறீர்கள் என்று சொன்னீர்கள் ஒருவேலை ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவன பேராசிரியர்களும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தான் உங்களைப் போன்று மனநிலையில் இருபார்களோ என்று என்னத் தோன்றுகிறது. எனது இத்தனை வருட கல்லூரி அனுபவத்தில் ஒரு ஆசிரியரைக்கூட மாணவர்களிடம் அன்பாக பழகி நான் பார்த்ததில்லை. மாச மாசம் எனக்கு சம்பளம் வருகிறது நீ படிச்சா என்ன படிக்கலாட்டி எனக்கென்ன வகைராக்கல் தான் ஆனால் அவர்கள் பிள்ளைகள் மட்டும் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமென்று கான்வெண்டிலும் வெளிநாடுகளிலும் படிக்க வைக்கின்றனர். ஒருசில விதிவிலக்குகள் இருக்கின்றன. எங்கள் பல்கலைக்கு அரசாங்கத்தில் கோடிக்கணக்கில் ஆராய்சிக்கு நிதி ஒதுக்குகின்றனர் பலபேர் தங்கள் சுயலாபத்திற்காக ஊழல் செய்பவர்களாகவே இருக்கின்றனர். ஆசிரியர்கள் பரந்த வாசிப்பனுபவம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர் இது என் தனிப்பட்ட கருத்து. உங்களைபோன்றவர்களை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நமக்கு இது போன்ற குருமார்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கமாகவும் இருக்கிறது.
தமிழில் அறிவியலை எழுதலாமா? வேணாமா? என்ற யோசனையே ஏற்படக்கூடாது உங்களுக்கு. தமிழ்நாட்டில் என்போன்றோர் திறமை இருந்தும் படிப்பை என்னி பயந்து அடுத்தவர்களால் ஏளனப்படுத்தப்பட்டுகொண்டு ஏராளமானோர் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் தான் ஒரே ஆறுதல். நான் இலக்கிய எழுத்தாளர்களையும் கவனித்து வருவதால் பணம் அதிகம் கிடைக்காது என்ற பிரச்சினைகள் ராயல்டி கம்மியா குடுக்கறாங்க போன்ற விசயங்கள் உங்களுக்கு கிடையாது என்பதை நானாகவே நினைத்து கொள்கிறேன்.
சென்றவாரம் ஈரோடு புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன் உங்களுடைய நானோ புத்தகம் வாங்கி வந்துள்ளேன் படித்துவிட்டு கண்டிப்பாக கடிதம் எழுதுவேன்.
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்பது எனது அளவுகடந்த ஆசை.
அன்புடன்
தா. அருள்.

👍
ReplyDeleteHi sir, i read your blogs for two days, it was amazing, I'm planning to conduct a magazine(ariviyal osain) for science exclusive in tamil, and looking for good hearted volunteer for contribution tamil, glas to seek your presence, thank you
ReplyDelete